யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் 04 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தொியவந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று காலை ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விஜயேந்திரன் ஆரணன் (வயது4) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
தோட்டத்தில் சிறுவனின் தந்தை வேலை செய்துகொண்டிருந்த நிலையில், கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல்போயுள்ளான்.
அதனையடுத்து பெற்றோர் தேடிய நிலையில், சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இது தொடர்பில் ஊர்காவற்றறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.