இலங்கை இராணுவத்தினர் சிலருக்கும் பாடசாலை மாணவர்களிற்கும் இடையில் கம்பஹா – மினுவாங்கொடை பகுதியில் கடும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம் மோதலின் போது இலங்கை இராணுவத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பு இராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் வவுனியா பாதுகாப்பு படை தலைமையகத்தை சேர்ந்த 03 இராணுவத்தினர் மினுவாங்கொடை பகுதியில் பாடசாலை மாணவர்கள் 07 பேருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.