TikTok வீடியோவினால் 17 வயது சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவர்களை ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரையில் தடுத்து வைக்க கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் 18 வயதிற்கு குறைந்தவர்கள் என்பதினால் அவர்களை மாகொல சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.