தமிழர் பகுதியெங்கும் 71ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
முல்லைத்தீவு – விசுவமடு பகுதி இளைஞர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை இன்று புதன்கிழமை (நவம்பர் 26, 2025) மாலை கேக் வெட்டிச் சிறப்பாகக் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலனும் கலந்து கொண்டு, இளைஞர்களுடன் இணைந்து கேக் வெட்டினார்.
வீதியால் சென்ற பொதுமக்களுக்குக் கேக் வழங்கி, தலைவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இளைஞர்கள் இவ்விழாவை மகிழ்வோடு கொண்டாடியிருந்தனர்.
தமிழர் பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 71ஆவது பிறந்த தினம் இன்று புதன்கிழமை (நவம்பர் 26, 2025) யாழ்ப்பாணம், நல்லூரிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக, மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயப் பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்களால் பொங்கல் பொங்கி வருகை தந்தவர்களுக்குப் பரிமாறப்பட்டது.
மேலும், கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், நினைவுகூரலை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








