இந்தியாவிடம் இருந்து இந்த மாத இறுதிக்குள், 900 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு நிதி உதவிப் பொதிகள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றன.
400 மில்லியன் டொலர் பெறுமதியான நாணயமாற்று கடன் வசதியும், 500 மில்லியன் டொலர் பெறுமதியான, எரிபொருள் கொள்வனவுக்கான கடன் தொகையுமே, இந்த மாதத்தில் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.
இவற்றில் ஒரு உதவிப் பொதி எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் கிடைக்கும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் முன்வைத்த மூன்று நிதி உதவி கோரிக்கைகளை இந்தியா ஏற்றுக் கொண்டிருப்பினும், நி உதவி வழங்கப்படும், சரியான திகதிகளை வழங்குவது கடினம், என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய அரசாங்கம் பொருட்களுக்கான கடன் வசதிகளை நிறுத்தியிருந்த நிலையில், இலங்கை அரசாங்கம் அத்தகைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதால், அந்த செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டியிருந்தது.
இதுவே காலதாமதத்திற்கு முக்கிய காரணம் என்றும் இந்திய வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதேவேளை, இலங்கை அரசாங்கத்தால் கோரப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் வசதி ஆவணப்படுத்தல் செயல்முறை காரணமாக அதிககாலம் எடுக்கும் என்றும் அறியப்படுகிறது.
எவ்வாறாயினும், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவரும் 10ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, இந்த நிதி உதவித் திட்டங்களை விரைவுபடுத்தவதற்கு கோரிக்கை விடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.