விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
வடுகப்பட்டி கிராமத்தில் இயங்கும், பட்டாசு ஆலையில் சுற்று கிராமங்களைச் சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று காலை 8. 45 மணியளவில், வெடிபொருள் அறையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேலும் 8 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற வெடிவிபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.