Welcome to Jettamil

கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்தது: பல முச்சக்கர வண்டிகள் நசுங்கி சேதம்!

Share

கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்தது: பல முச்சக்கர வண்டிகள் நசுங்கி சேதம்!

​திருகோணமலை – கந்தளாய் தள வைத்தியசாலைக்கு முன்பாக நின்றிருந்த பாரிய மரம் ஒன்று இன்று (11) திடீரென முறிந்து வீழ்ந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல முச்சக்கர வண்டிகள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

​வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்தவர்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் நோக்கில், வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அண்மையில் வழமையாக தரித்து வைக்கப்படும் முச்சக்கர வண்டிகளே இவ்வாறு மரத்தின் கீழ் சிக்கி நசுங்கியுள்ளன.

​இன்று காலை எதிர்பாராத விதமாக இந்த மரம் முறிந்து வீழ்ந்த போது, முச்சக்கர வண்டிகளில் சாரதிகள் எவரும் இல்லாததாலும், பாதசாரிகள் அருகில் இல்லாததாலும் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

எனினும், முச்சக்கர வண்டிகளின் மேற்கூரைகள் மற்றும் இயந்திரப் பகுதிகள் முற்றாக நசுங்கி சேதமடைந்துள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

​சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து வீழ்ந்த மரத்தின் கிளைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

​ (கியாஸ் ஷாபி)

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை