நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது புதிய எரிபொருள் விலை!
நள்ளிரவு முதல் அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் (Auto Diesel) விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 407 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், லங்கா சுப்பர் டீசல் (Super Diesel) விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 478 ரூபாயாகவும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் (Octane 92) விலை லிட்டருக்கு 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் (Octane 95) விலை 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் (Kerosene) விலையும் லிட்டருக்கு 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 285 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





