Welcome to Jettamil

முதியோர் இல்ல தீ விபத்து: அறைகளில் பூட்டப்பட்ட நிலையில் சிக்கிய முதியவர்கள் – வெளியாகிய அதிர்ச்சி தகவல்

Share

முதியோர் இல்ல தீ விபத்து: அறைகளில் பூட்டப்பட்ட நிலையில் சிக்கிய முதியவர்கள் – வெளியாகிய அதிர்ச்சி தகவல்

ஹொரணை – படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய வயோதிப பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய வாக்குமூலத்தில், முதியவர்களை அறைகளுக்குள் வெளிப்புறமாக பூட்டி வைப்பது அந்த இல்லத்தில் வழக்கமான நடைமுறையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, கடந்த காலத்தில் ஒருவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, அவசரகால வெளியேறும் வசதிகள் இன்றி முதியவர்கள் அறைகளுக்குள் பூட்டப்பட்டு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த இரவு, முதியவர்கள் தங்களது வார்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, பெண் பிரிவை பொறுப்பேற்றிருந்த ஊழியரும், ஆண்கள் பிரிவை கவனித்த அவரது கணவரும் அறைகளின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மற்ற ஊழியர்களுடன் சமையல் பணிக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வேளையில், ஆண்கள் பிரிவில் இருந்த மெத்தைகள் குவியலிலிருந்து தீ பரவத் தொடங்கியதை ஒருவர் கவனித்து மற்றவர்களுக்கு எச்சரித்துள்ளார்.

தீ வேகமாகப் பரவிய நிலையில், அச்சமடைந்த முதியவர்கள் வெளியேற முயன்றபோதும், கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் தப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், உயிரைக் காப்பாற்ற வேண்டிய ஊழியர்கள் கதவுகளைத் திறக்காமல் சாவிகளுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இரண்டு முதியவர்கள் தங்களது படுக்கைகளுடன் கட்டப்பட்டிருந்ததால் அங்கிருந்து நகர முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக வந்த கிராம மக்களும் ஆரம்பத்தில் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காரணம், இல்லத்தின் பிரதான நுழைவாயிலும் பூட்டப்பட்டிருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஒரு கதவு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த சில முதியவர்கள் தப்பித்து உயிர் காத்துக் கொள்ள முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: IBC

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை