Welcome to Jettamil

கை முறிந்த சிறுவனுக்கு 24 மணி நேரமாக சிகிச்சை இல்லை? கிண்ணியா வைத்தியசாலை மீது தந்தை பகிரங்க குற்றச்சாட்டு

Share

கை முறிந்த சிறுவனுக்கு 24 மணி நேரமாக சிகிச்சை இல்லை? கிண்ணியா வைத்தியசாலை மீது தந்தை பகிரங்க குற்றச்சாட்டு

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கை முறிந்த சிறுவனுக்கு 24 மணி நேரத்திற்கும் மேலாக உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என அவரது தந்தை கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த காணொளியில், கடந்த 18ஆம் தேதி கை முறிவு ஏற்பட்ட நிலையில் தனது மகனை கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், ஆனால் ஒரு நாள் கடந்தும் தேவையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இதனால் வேறு வழியின்றி தனது மகனை வைத்தியசாலையிலிருந்து மீண்டும் அழைத்துச் செல்ல நேரிட்டதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கிண்ணியா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் இரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மட்டுமின்றி, சிகிச்சைக்குத் தேவையான சில மருத்துவப் பொருட்களையும் வெளியிலுள்ள தனியார் மருந்தகங்களில் இருந்து பெற்றுவர வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், வைத்தியசாலையில் நிலவும் இந்த குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் போதிய கவனம் செலுத்தவில்லை என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை