Welcome to Jettamil

ரூ.153 கோடி லாட்டரி வென்றும் கையில் பணம் இல்லை! ஒரு தவறால் பரிசை இழந்த பெண்ணின் பரிதாபம்

Share

ரூ.153 கோடி லாட்டரி வென்றும் கையில் பணம் இல்லை! ஒரு தவறால் பரிசை இழந்த பெண்ணின் பரிதாபம்

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த கீத் மெயின் என்ற பெண், கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.

கடந்த ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலில், அவர் வாங்கிய சீட்டுக்கு 12 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.153 கோடி) பரிசு விழுந்ததாக பின்னர் தெரியவந்தது.

லாட்டரி வெற்றி குறித்து அறிந்த கீத், அந்த சீட்டை தனது தாயிடம் கொடுத்து சரிபார்க்கச் செய்துள்ளார். ஆனால், இயந்திரத்தில் ஸ்கேன் செய்தபோது வெற்றி பெற்றதைக் குறிக்கும் எச்சரிக்கை ஒலி வராததால், அந்த சீட்டு வெற்றி பெறவில்லை என நினைத்து அவரது தாய் அதை லாட்டரி மையத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசியதாக கூறப்படுகிறது.

பின்னர் உண்மை தெரியவந்ததும், கீத் உடனடியாக லாட்டரி நிறுவனத்தை தொடர்புகொண்டு, வெற்றி பெற்ற சீட்டு தங்களிடம் இருந்ததாக தெரிவித்தார். இருப்பினும், அசல் சீட்டு தற்போது இல்லாததால் பரிசுத் தொகையை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக லாட்டரி நிறுவனம் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், சீட்டை கண்டுபிடிக்க 30 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரூ.153 கோடி பரிசை வென்றும், ஒரு சிறிய தவறால் அதை பெற முடியாமல் தவித்து வரும் இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை