சங்கீதனை விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சமூக அமைப்புகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டக்காரர்கள் “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, “சங்கீதனை விடுதலை செய்”, “வேண்டாம் வேண்டாம் PTA வேண்டாம்”, “சர்வதேசமே நீதி வேண்டும்” உள்ளிட்ட கோசங்களை முழங்கியதுடன், பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.





