Welcome to Jettamil

நெருப்பால் சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன் – யாழில் கொடூரம்!

Share

நெருப்பால் சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டான்.

யாழ். மாவட்டம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 12 வயதுச் சிறு வன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட் டுள்ளான்.

சிறுவனின் தாயின் கணவர் நெருப்பால் சுட்டதில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. கை, முகம் எனப் பல இடங்களிலும் காயங்கள் காணப்படுகின்றது என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரி விக்கின்றன.

இவ்வாறு தீக் காயத்திற்கு இலக்கான சிறுவன் அந் தத் தீப்புண்ணுடன் நேற்றைய தினம்பாடசாலைக் குச்சென்றுள்ளான். அதனை அவதானித்த ஆசிரியர்கள் அவனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுவனிடம் வாக்குமூலம் பெற்று சட்டநட வடிக்கைகளைத் தொடங்கி யுள்ளனர் பொலிஸார். விசாரணையின்போது தனது கணவரைப் பாதுகாக்கும் நோக்கில் தானே மக னுக்குச் சூடுவைத்தார் என்று தாயார் தெரிவித்துள்ளார் எனக் கூறப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை