விபத்தில் 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
நேற்று (29) பெரியநிலாவணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஷ்ணு வித்தியால வீதி பகுதியில் பாடசாலை வேன் ஒன்று மோதியதில் பலத்த காயமடைந்த சிசு கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
பெரியநிலவாணி 02 இல் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் மூத்த சகோதரி பாடசாலைக்கு செல்வதற்காக பாடசாலை வேனில் சகோதரியை ஏற்றிச் சென்றதையடுத்து சாரதி வாகனத்தை முன்னோக்கி செலுத்தியதில் குழந்தை வேனின் அடியில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெரியநிலவாணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.