Welcome to Jettamil

மூச்சுத் திணறலால் யாழ்ப்பாணத்தில் 6 மாத சிசு உயிரிழப்பு!

Share

மூச்சுத் திணறலால் யாழ்ப்பாணத்தில் 6 மாத சிசு உயிரிழப்பு!

மூச்சுத் திணறல் காரணமாக நேற்று அதிகாலை ஆறு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதி பகுதியைச் சேர்ந்த பிருந்தாபன் அட்சரா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 22ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் பெற்றோர் இரவு 12 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலைவேளை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை