Welcome to Jettamil

கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பினரால் மாணவர்கள், ஆசிரியர்கள் கெளரவிக்கும் நிகழ்வு!

Share

கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பினரால் மாணவர்கள், ஆசிரியர்கள் கெளரவிக்கும் நிகழ்வு!

கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பினரால் மாணவர்கள், ஆசிரியர்கள் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலை 3.00 மணியளவில் கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு கெளரவ விருந்தினராக யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்டணம் அடிகளார் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக கட்டைக்காடு பங்குத்தந்தை A.அமல்ராஜ்,கட்டைக்காடு றோ,க,த,க பாடசாலை அதிபர் T.யோகலிங்கம் மற்றும் முள்ளியான் கிராம சேவகர் K.சுபகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உயர்தர மாணவர்கள் மற்றும் சித்தியடைந்த ஏனைய மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதோடு, ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கட்டைக்காடு கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பு வடமராட்சி கிழக்கில் மட்டுமல்ல யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிகளவான சமூக சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை