மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர முயற்சிப்பதன் காரணத்தினால் தன் மீது ஆயுதம் தாங்கிய அடையாளம் தெரியாத சிலர் உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் லவக்குமார் தெரிவித்துள்ளார்.
தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.