Friday, Jan 17, 2025

யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இன்று அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் குழு!

By kajee

யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இன்று அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் குழு!

யாழ்ப்பாணத்தில் இன்று (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இன்று அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 வயதான இளைஞன், வண்ணார்பண்ணையை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து வாள், இரும்பு கம்பி, இரும்பு குழாய் என்பன மீட்கப்பட்டன.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு