Thursday, Jan 16, 2025

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் – நெடுங்கேணியில் பதற்றம்!

By kajee

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் – நெடுங்கேணியில் பதற்றம்!

வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது.

நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது, தமது ஆர்ப்பாட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மக்களிடத்தில் உரையாட வருகைதந்தபோதும் அதை புறக்கணித்த மக்கள் அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதன் காரணமாக விசேட அதிரடிப்படியினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு