Welcome to Jettamil

ஆனைக்கோட்டையில் ஹீரோயினுடன் ஆணும், கசிப்புடன் பெண்ணும் கைது!

Share

ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இளைஞன் ஒருவர் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டார்.

உடைமையில் ஹெரோயின் வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றது.

40 மில்லிகிராம் ஹெரோய்னுடன் 24 வயதான இளைஞரே கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆனைக்கோட்டைப் பகுதியில் கோடாவுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கு தவணையிடப்பட்டுள்ளது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வுத் தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் 28 லீற்றர் கோடாவை பெண்ணொருவரிடமிருந்து மீட்டனர். சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். நீதிமன்று சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கை தவணையிட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை