புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்த தடைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மின்சார உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை சேகரிப்பது தொடர்பாக உரிய விநியோகஸ்தர்களுடன் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும்,
இதனால் எதிர்காலத்தில் மின் கட்டணத்தினை குறைப்பதற்குரிய திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.