Welcome to Jettamil

வீட்டின் மேல் தென்னை மரம் விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதம்

Share

வீட்டின் மேல் தென்னை மரம் சரிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காட்டு பகுதியில் இன்று அதிகாலை கடும் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் குறித்த மரம் சரித்துள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் படுத்துறங்கிக் கொண்டிருந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் திடீரென பெரும் சத்தம் கேட்டது. தேங்காய் மற்றும் ஓடுகள் படுத்துறங்கியவர்கள் மீது வீழ்ந்துள்ளது.

சம்பவத்தில் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளர். வீட்டு உரிமையாளர் எழுந்து பார்த்த பொழுது வீட்டின் மீது தென்னை மரம் ஒன்று வேறுடன் சரிந்து விழுந்துள்ளதை அவதானித்தார்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் கிராம சேவையாளர் அவர்களுக்கு தெரிவித்ததுடன், குறித்த மரத்தினை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அத்துடன் மரம் வீழ்ந்ததில்
வீட்டின் முற்பகுதியில் கூரைத்தகடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டின் கூரையின் ஓடுகளும் உடைந்து வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை