Welcome to Jettamil

யாழ் நகரில் திடீரென பற்றியெரிந்த வாகனம்!

Share

யாழ் நகரில் திடீரென பற்றியெரிந்த வாகனம்!

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் வாகனமொன்று இன்றைய தினம் தீக்கிரையாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது.

வாகனமொன்றில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம் என தெரியவருகிறது. யாழ் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தினர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை