யாழ்மாவட்டத்தில் இது வரை எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என வடமாகாண பொலிஸ்மா அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தொடரும் வன்முறைகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக நமது நாடு ஸ்தம்பிதம் அடைந்து ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு வெளியேறுவதும், ஒன்று கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.தென்னிலங்கையில் சூடு பிடிக்கும் வன்முறைகள் தமிழர் வாழ் பகுதிகளில் இதுவரை அரங்கேரவில்லை.
இந்நிலையில் தற்போதைய நிலைமையில் வடபகுதியின் நிலை குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் தற்போது வரை எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது.
நாடுபூராகவும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மற்றும் அரசதரப்பு ஆதரவாளர்களின் வீடுகள் வாகனங்கள் எரியூட்டப்பட்ட தோடு தாக்கப்பட்ட நிலையில் நாடு பூராகவும் அரசு ஆதரவாளர்களின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை.
எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசிற்கு ஆதரவளித்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் அங்கயன் இராமநாதனின் அலுவலகம் மற்றும் பொது ஜன பெரமுனவின் இரண்டு அலுவலகங்கள் உள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் எந்தவித போராட்டங்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.