காலி முகத்திடலில் ஏற்பட்ட வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
அரச ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வெடித்த வன்முறை நாடாளு முழுவதும் பற்றியெரிந்தது.குறித்த வன்முறை சம்பவங்களில் படுகாயமடைந்த 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பொலிஸ் உத்தியோகத்தரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதேவேளை இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதன்படி, காலிமுகத்திடல் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.