பண்டிகை காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் இவ்வாறான விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 5 நாட்களில் 270 சாலை விபத்துகள் நடந்துள்ளன.
இதேவேளை, கடந்த காலங்களில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் வாகனங்களை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.