Welcome to Jettamil

அரச உத்தியோகத்தர்களுக்கு  முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை

Share

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு  முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை அவர்களுக்கு எரிபொருள் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.குறித்த தகவலை அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் கே.டி.எஸ் ருவன் சந்திரா தெரிவித்துள்ளார்.குறித்த உத்தியோகத்தர்கள் பரீட்சை கடமை நியமனக் கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை