Welcome to Jettamil

கோட்டகோகம மீதான தாக்குதலுக்கு  பூரண ஆதரவு வழங்குவோம் நாமல் தெரிவிப்பு

Share

கோட்டகோகம மீதான தாக்குதல் தொடர்பிலான  விசாரணைகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக  முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.

கோட்டா கோகம சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெயரிடப்பட்ட அனைவரும், குற்றப் புலனாய்வுப் பிரிவில்  சரணடைந்து வாக்கு மூலங்களை வழங்கி வருவதாக  பாராளுமன்றத்தில்  முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  இன்று தெரிவித்துள்ளார்.கொலை, ஆணவக் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி,அரசியல் பாகுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாதுவிட்டால்  சட்டம், ஒழுங்கு மற்றும் சமூகம் கேள்விக்குறியாகும் நிலைக்குச் செல்லுமென   அவர் தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால், அரசியல் நோக்கத்துடன் வன்முறைச் செயல்களை வழிநடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் தாக்கத்திற்குப் பின்னர்  சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் என இரண்டு குழுக்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.தாக்குதலுக்கு ஆளான இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனவும், தாக்குதல் மற்றும் தீவைப்பு  செயல்களை வழிநடத்தியவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் சபையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவிடம் இன்று  வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை