Welcome to Jettamil

நடிகர் பிரதாப் போத்தன் மரணம்

Share

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் தனது 70 ஆவது வயதில், சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் நேற்று  காலமானார்.

திருவனந்தபுரத்தில் பிறந்த பிரதாப் போத்தன் 1978ம் ஆண்டு மலையாள திரை உலகில் அறிமுகமானார்.

அழியாத கோலங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர்,  மூடு பனி,  வறுமையின் நிறம் சிகப்பு, குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள் போன்ற காலத்தால் அழியாத திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அத்துடன், மீண்டும் ஒரு காதல் கதை மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதாப் போத்தன் அந்தப் படத்திலேயே , தேசிய விருது பெற்றவர்.

மைடியர் மார்த்தாண்டன், ஜீவா, வெற்றி விழா,சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை