நடிகர் வடிவேலு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாய் சேகர் படத்தின் பாடல் தொடர்பாக வடிவேலு, இயக்குநர் சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர்.
அந்த பணி முடிந்து சென்னை திரும்பிய நிலையில் வடிவேலுவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.