இயேசு கிறிஸ்து அவதரித்த நாளான இன்று உலகமெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடனம், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேவாலயங்களில் ஏராளமான மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் கட்டுப்பாடுகளுடன் வழக்கத்தை விட எளிமையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு அரசின் செயல்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் கிறிஸ்துமஸ் வழிபாடு நடத்துவதற்கு ஏராளமான தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.