Monday, Jan 13, 2025

மீண்டும் வாகன இறக்குமதி – இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவல்

By Jet Tamil

நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துளார்

வாகன இறக்குமதிக்கான தடை இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மூன்று வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்களும் வாகன இறக்குமதியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு