தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர் சேவைகள் இன்று (25) சேவையில் ஈடுபடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பேருந்து சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் இதனை தெரிவித்துள்ளார்.