இன்று தொடக்கம் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் கீழ் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இந் நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.
QR குறியீட்டின் கீழ் பரீட்சார்த்தமான முறையில் எரிபொருள் வழங்கும் நடைமுறை வெற்றியளித்துள்ளதாகவும் இதனால் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.