Sunday, Jan 19, 2025

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி

By Jet Tamil

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி

முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

kilinochi acci

குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில், நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது மோதி நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியது.

இதன் காரணமாக, அந்த நோயாளர் காவு வண்டியின் முன் பக்கம் மிகவும் சேதமடைந்துள்ளது. மேலும், அந்த வண்டி இனி இயக்க முடியாத நிலையில், நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து மற்றொரு நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி
Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு