Friday, Jan 17, 2025

மற்றொரு பரீட்சையின் வினாத்தாளும் கசிவு!

By Jet Tamil

மற்றொரு பரீட்சையின் வினாத்தாளும் கசிவு!

வட மத்திய மாகாணத்தில் 11வது வகுப்பு தவணை பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

அதன்படி, இன்று காலை 8.00 மணியளவில் 08 வலயங்களில் உள்ள 30 பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, புதிய வினாத்தாள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த முறைகேடு எவ்வாறு நடைபெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு