யாழில் பொலிஸாரால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று (06) சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால், சுன்னாகம் நகரப் பகுதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, தலைக்கவசம் இன்றி வாகனம் செலுத்துபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அதுபோல வீதியோரங்களில் சட்டரீதியற்ற நடமாடும் வியாபாரிகள், வாகனங்களில் தேவையற்ற அலங்கரிப்புகள் செய்தவர்கள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை வீதியில் காட்சிப்படுத்துபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு அவற்றை சீர் செய்யுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது.