பாதுகாப்பற்ற ரயில் கடவையில் மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு
சிலாபம் – புத்தளம் புகையிரதத்தின் புலிச்சாகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையில் மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் ரயிலை நிறுத்தி ரயில் தண்டவாளத்தை கடந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புளிச்சாகுளத்தை சேர்ந்த 19 வயதுடைய மொஹமட் அஸ்லம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர் புகையிரதம் புத்தளம் சென்று மீண்டும் சிலாபம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் பிரதேசவாசிகள் புலிச்சகுளம் நிலையத்திற்கு அருகில் ரயிலை மறித்துள்ளனர்.
அங்கு, பாதுகாப்பற்ற ரயில்வே கடவை குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.