யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சுமார் 3 மணத்தியாலத்திற்கும் மேலாக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்
கடந்த 2022 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கபட்டமை மற்றும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள் தொடர்பிலேயே விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.