Welcome to Jettamil

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா பதவி விலகல்

Share

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜூன் 1 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்பார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தற்போது பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக கடமையாற்றி வருகின்றார்.மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜூன் 1 ஆம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவார் என்று  இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்கவுள்ள மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தற்போது இராணுவத்தின் பிரதானியாக கடமையாற்றி வருகின்றார்.பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இம்மாதம் 31 ஆம் திகதி பதவி விலகியதைத் தொடர்ந்து, 2022 ஜூன் 1 ஆம் திகதி முதல் புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவியேற்ற போது, பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை