ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினரின் தாக்குதல் நடாத்தியமைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கவலை தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளால் இராணுவத்தினரின் இச் செயல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் காயமடைந்தவர்களுக்கு விரைவாக மருத்துவ வசதியை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதாவது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். நேற்று இரவு போராட்ட களத்திற்குள் அத்துமீறிய இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டியுள்ளதுடன் அதில் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.