கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 25 பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதமர், இன்று (31) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது நாட்டின் பொதுச் சட்டத்திற்கமையவே தவிர தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் கூடும் இடம் குறித்து மாத்திரமே போராட்ட ஏற்பாட்டாளர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும், அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது பற்றி அல்ல என்றும் பிரதமர் கூறினார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை எழுப்பியதுடன், கருத்துச் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமையை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரிவித்தார்.