Jet tamil
இலங்கை

ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினரின் வீட்டுக்கு தீ வைப்பு; மக்கள் மறியல்

WhatsApp Image 2024 04 02 at 9.32.49 AM 1 533x400 1

ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினரின் வீட்டுக்கு தீ வைப்பு; மக்கள் மறியல்

மதுரங்குளி – முக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள இலங்கை ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினர் ஒருவரின் வீடு மற்றும் அவரின் சொத்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கோரி, மதுரங்குளி-தொடுவாய் பிரதான வீதியை மறித்த மக்கள், இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரங்குளி, தொடுவா பகுதியில் இயங்கி வரும் செமன் தொழிற்சாலை காரணமாக தமது பிரதேசத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த தொழிற்சாலையை சட்டரீதியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினர் தலைமையில் சிலர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையிலேயே, மேற்படி ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினரின் வீடு மற்றும் வாகனம் உள்ளிட சொத்துகள் சில காடையர் குழுவினரால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைக் கண்டித்து மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியை மறைத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பியும் சுலோகங்களை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் தீ சம்பவம் தொடர்பில் 06 சந்தேகநபர்கள் மதுரங்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, குறித்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment