Sunday, Jan 19, 2025

தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸார் மீது தாக்குதல்

By Jet Tamil

வீரகட்டிய, அத்தனயால பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிரதேசவாசிகள் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 06 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

நேற்று (06) பிற்பகல் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீதியில் சென்றவர்கள் மீது சந்தேகமடைந்து அவர்களைச் சோதனையிட்டனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குழுவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் அது மோதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு