நுவரெலியா நகரில் நான்கு மாடிகளுக்கு மேல் கட்டடங்களை நிர்மாணிப்பதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
உயரமான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதால் நகரத்தின் அழகு கெட்டுவிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் அறிவித்துள்ளார்.
நுவரெலியாவில் பாரிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதால் நகரம் அழிந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.