Welcome to Jettamil

சீன அமைச்சரின் பயணத்தை அடுத்து மீண்டும் இந்தியா செல்கிறார் பசில்

Share

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு மீண்டும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும், ஜனவரி 9ஆம் திகதி அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று, புதுடெல்லிக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட உறுதிப்படுத்தியுள்ளார்.

10ஆவது குஜராத் பூகோள மாநாடு எதிர்வரும்  ஜனவரி 10ஆம் திகதி தொடக்கம், 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்கவே, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, தனியார்துறை வர்த்தக குழுவினருடன் இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

இந்திய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து இந்தப் பயணத்தின் போது அவர் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீன வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், மறுநாள், பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.

நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அண்மையில் பசில் ராஜபக்ச புதுடெல்லிக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

எனினும், இந்தியப் பிரதமர் மோடியை அவரால் சந்திக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஜனவரி மாதம் குஜராத் மாநாட்டுக்காக செல்லும் போது அவர் இந்தியப் பிரதமரை சந்திப்பாரா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை