Welcome to Jettamil

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

Share

வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை புனரமைக்க 6 ஆயிரத்து 230 கோடி ரூபாவை வழங்குமாறு கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அதனை முழுமையாக ஆய்வு செய்து நிதியை ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

கடந்த மாதம் 21ம் திகதி மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டநிலையில் இன்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழகத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக 1 ஆயிரத்து 510.83 கோடி ரூபாவும், சாலைகள்,

பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்காக 4 ஆயிரத்து 719.62 கோடி ரூபாவும் நிவாரணமாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை