பொறுமையாக இருங்கள் – மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின்படி மின்சாரக் கட்டணங்கள் நிச்சயமாகக் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
அவசரப்பட வேண்டாம், இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள்; கட்டணக் குறைப்பு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சபையில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.





