Welcome to Jettamil

பிரதமர் ஹரிணி சிறையில் அடைக்கப்பட வேண்டும் : அடித்துக்கூறும் சாமர

Share

பிரதமர் ஹரிணி சிறையில் அடைக்கப்பட வேண்டும் : அடித்துக்கூறும் சாமர

தவறான கல்வித் தொகுதியை (Module) அறிமுகப்படுத்தியதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று சபையில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

“தவறான ஊசி மருந்து விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறைக்குச் சென்றார் என்றால், தவறான பாடத்திட்டத்தைக் கொண்டுவந்த பிரதமரும் அதே தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

ஊசியை வைத்தியர் போட்டிருந்தாலும் அமைச்சர் எப்படிப் பொறுப்பானாரோ, அதேபோல கல்வித் திணைக்களம் செய்த தவறுக்கும் பாடத்திட்டத்திற்குப் பொறுப்பான பிரதமர் தனது பொறுப்பிலிருந்து விலக முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

தனக்கும் கெஹெலியவிற்கும் ஒரு நீதி என்றால், பிரதமருக்கும் அதுவே நீதியாக இருக்க வேண்டும்; இல்லையெனில் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை