Welcome to Jettamil

மருதங்கேணி வைத்தியசாலையில் இரத்ததான முகாம் – ஆர்வமுடன் பங்கெடுத்த கொடையாளர்கள்

Share

மருதங்கேணி வைத்தியசாலையில் இரத்ததான முகாம் – ஆர்வமுடன் பங்கெடுத்த கொடையாளர்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான முகாம் வைத்தியர் N.நரேந்திரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

காலை 09.00 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கி ஊழியர்கள் ஊழியர்கள் பங்கெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் இரத்தவங்கியில் O Positive வகை குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வைத்தியர், வைத்தியசாலை ஊழியர்கள், சுகாதார பரிசோதகர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்தும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் இரத்தவங்கியில் குருதித்தட்டுப்பாடு நிலவுவதால் ஆர்வமுள்ள இரத்த கொடையாளர்கள் வைத்தியசாலையை தொடர்பு கொண்டு இரத்ததானம் செய்யுமாறு மருதங்கேணி பிரதேசவைத்தியசாலை வைத்தியர் N.நரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை